உலகம்

தலிபானை பயங்கரவாத குழு பட்டியலில் இருந்து நீக்கியது ரஷிய உச்சநீதிமன்றம்
- 2003-ல் தலிபானை பயங்கரவாத குழுவில் சேர்த்தது ரஷியா.
- தலிபான் உடன் தொடர்வு வைத்திருந்தால் ரஷியா சட்டப்படி குற்றமாகும்.
ரஷியா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத குழு பட்டியலில் தலிபான் அமைப்பை வகைப்படுத்தியிருந்தது. தற்போது அந்த பட்டியலில் இருந்து தலிபானை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத குழு பட்டியலில் வகைப்படுத்தியிருந்ததால், கடந்த 2003ம் ஆண்டில் இருந்து தலிபான் உடன் தொடர்பு வைத்திருந்தால் அது ரஷிய சட்டத்தின்படி குற்றமாகும். தற்போது நீக்கப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபானுக்கு இது ராஜாங்க ரீதியிலான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பயங்கரவாத அமைப்பு என வகைப்படுத்தப்பட்டதை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என கடந்த வருடம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் தடையை நீக்க வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Next Story