உலகம்

அமெரிக்கா வரிவிதித்த உடனே புதினுக்கு போன் போட்டு உக்ரைன் போர் வியூகம் குறித்து கேட்ட மோடி - நேட்டோ தலைவர்
- மார்க் ரூட்டே CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
- ரூட்டேவின் கூற்று உண்மைக்கு மாறான முற்றிலும் ஆதாரமற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திற்கு வந்திருந்த நேட்டோ (NATO) அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவின் மீதான 50% வரிகளை டிரம்ப் விதித்தது, ரஷியா மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதினை போனில் அழைத்து உக்ரைன் போர் உக்ரைன் போரில் ரஷியாவின் வியூகம் என்ன என்று கேட்க வைத்தது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இதுபோன்ற எந்த உரையாடலும் நடக்கவில்லை என்றும் ரூட்டேவின் கூற்று உண்மைக்கு மாறான முற்றிலும் ஆதாரமற்ற ஒன்று என மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
Next Story