உலகம்

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80,000 அபராதம் விதிப்பு
- 2023 ஆம் ஆண்டு முதல் ஷியாமலா புறாக்களுக்கு உணவு வழங்கி வந்துள்ளார்.
- புறாக்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தினர்.
சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷியாமலா என்ற மூதாட்டிக்கு ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பறவை, விலங்குகளுக்கு வனவிலங்கு மேலாண்மை துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று உணவளிக்க வேண்டும் என அந்நாட்டு சட்டம் கூறுவதால் ஷியாமலாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷியாமலா புறாக்களுக்கு உணவு வழங்கி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அப்போது அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறாமல் வனவிலங்குகளுக்கு உணவு அழிப்பது சட்டவிரோதம் என்று அவரிடம் தெரிவித்த அதிகாரிகள் புறாக்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
இதன் பிறகும், 2024 நவம்பர் வரை ஷியாமலா பலமுறை புறாக்களுக்கு உணவளித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 19 அன்று, ஷியாமலா தனது வீட்டிற்கு அருகில் புறாவை பிடிக்க முயற்சி செய்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
புறாக்களுக்கு அனுமதி பெருமாள் உணவு அளித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.