உலகம்

வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை: டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுக்கு விட்டு தரமாட்டேன்- உக்ரைன் அதிபர் திட்டவட்டம்
- உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது.
- இது எதிர்கால ரஷிய படையெடுப்பிற்கு ஒரு ஊக்கமாக மட்டுமே செயல்படும்.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
ரஷிய அதிபர் புதினுடன் வருகிற 15-ந்தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமைதி ஒப்பந்தத்தின்படி சில நிலங்களை உக்ரைன் விட்டுகொடுக்க வேண்டியதிருக்கும். இரு நாடுகளும் நில பரிமாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் ஜெலன்ஸ்கி கூறியதாவது:- போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள 30 சதவீதத்திலிருந்து உக்ரைன் விலக வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் விரும்புகிறார்.
உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது. அது அரசியலமைப்பிற்கு முரணானது, எதிர்கால ரஷிய படையெடுப்பிற்கு ஒரு ஊக்கமாக மட்டுமே செயல்படும்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.