என் மலர்

    வழிபாடு

    சனிதோஷத்தை நீக்கும் அந்தியூர் பத்ரகாளியம்மன்
    X

    சனிதோஷத்தை நீக்கும் அந்தியூர் பத்ரகாளியம்மன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள்.
    • பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களது வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறியும் வருகின்றது.

    இதில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடி வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் துர்க்கை பூஜை வழிபாட்டு குழுவினர் திருவிளக்கு பூஜைகளும் நடத்தி வருகின்றார்கள். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ராகு, கேது, சனி தோஷம் விலகும்.

    சிறப்பு தலமாகவும் விளங்குகிறது. பத்ரகாளி அம்மன் கோவிலில் உள் வளாகத்தில் ஆஞ்சநேயர் இருப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்லும் போது சனியால் ஏற்படும் இன்னல்கள் தணிந்து, நன்மைகள் நடைபெறுவது இந்த கோவில் சிறப்பு அம்சமாகும்.

    மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய பேறு, நோய் தீர்க்கும் அம்மனாகவும் அந்தியூர் பத்ரகாளியம்மன் விளங்கி வருகிறார். இதனால் பண்டிகை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது தொன்று தொட்டு வழக்கமாக நடந்து வருகிறது.

    Next Story
    ×