என் மலர்

    வழிபாடு

    விரதம் இருக்கும் போது பிரசாதம் சாப்பிடலாமா?
    X

    விரதம் இருக்கும் போது பிரசாதம் சாப்பிடலாமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விரத நாட்களில் கோவில் பிரசாதம் சாப்பிடும் நோக்கத்திற்காகவே சிலர் கோவிலுக்கு செல்வதுண்டு.
    • சனிக்கிழமை சனி பகவான், பெருமாள் மற்றும் நவக்கிரக வழிபாடு செய்யலாம்.

    விரதம் இருக்கும் போது கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடலாமா என்பது அனேக பக்தர்களின் சந்தேகமாக உள்ளது. சிலர், கடவுளுக்கு தானே விரதம் இருக்கிறோம் அதனால் பிரசாதத்தை சாப்பிடலாம் என்பார்கள். பசியைக் கட்டுப்படுத்தி இறை சிந்தனையோடு விரதம் இருக்க வேண்டும். எனவே , தாங்கள் கடுமையான விரதம் இருப்பதாகவும் அதனால் இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது என்றும் சிலர் சொல்வார்கள். இதில் எது சரி என்று பார்க்கலாம்.

    விரதம் இருக்கும் போது எந்த தெய்வத்தை நினைத்து விரதம் இருக்கிறோமோ, அன்றைய நாள் அந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வருவது வழக்கம். அப்படி கோவிலுக்கு செல்லும் போது அந்த கோவிலில் பிரசாதம் கொடுத்தால் தாராளமாக வாங்கி கடவுளின் பெயரைச்சொல்லி சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை.

    எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் பிரசாதம் கிடைத்துவிடாது. கோவில் பிரசாதம் கிடைப்பது கடவுளின் அருள் கிடைப்பது போன்றதுதான். அதுமட்டுமில்லாமல் பிரசாதம் சிறிய அளவில் தான் வழங்கப்படும். அதனால் உங்கள் விரதம் ஒருபோதும் தடைபடாது.

    விரதம் இருக்கும் போது நீங்கள் கோவிலுக்கே செல்லவில்லை. ஆனாலும் அக்கம் பக்கத்தினர் கோவில் பிரசாதம் என்று உங்களுக்கு கொடுக்கும் போது சற்றும் தயங்காமல் அந்த பிரசாதத்தை சாப்பிடலாம். எந்த வித தயக்கமும் தேவை இல்லை.

    விரத நாட்களில் கோவில் பிரசாதம் சாப்பிடும் நோக்கத்திற்காகவே சிலர் கோவிலுக்கு செல்வதுண்டு. அப்படிதான் செல்லக் கூடாது. ஏனென்றால் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை இரண்டு மூன்றுமுறை வாங்கி சாப்பிட்டு விட்டு நானும் விரதம் இருக்கிறேன் என்று சொல்வதில் எந்தவித பலனும் இல்லை.

    சிலர் ஒரு பொழுது விரதம் இருப்பார்கள். சிலர் நீராகாரம் மட்டும் அருந்துவார்கள். இன்னும் சிலர் ஒரு நாள் முழுவதும் உண்ணா நோன்பிருப்பார்கள். அதிலும் சிலர் விரதம் இருக்கிறேன் என்று நீர் கூட அருந்தாமல் இருப்பார்கள். அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலை பொருத்து தான் விரதம் இருக்க வேண்டும்.

    எந்தெந்த கடவுளுக்கு எந்தெந்த நாட்களில் விரதம் இருக்கலாம் என்று பார்க்கலாம்...

    ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானையும், திங்கட்கிழமை சிவனையும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானையும் வணங்கி விரதமிருந்து வழிபடலாம். புதன்கிழமை பெருமாள், வியாழன்கிழமை நவக்கிரக வழிபாடு, வெள்ளிக்கிழமை அம்மனை விரதமிருந்து வணங்கலாம். சனிக்கிழமை சனி பகவான், பெருமாள் மற்றும் நவக்கிரக வழிபாடு செய்யலாம்.

    Next Story
    ×