என் மலர்

    மொபைல்ஸ்

    அசத்தல் சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸ்
    X

    அசத்தல் சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலின் 42 மில்லிமீட்டர் அலுமினியம் ஜி.பி.எஸ். மாடலுக்கு ரூ. 46,900 என தொடங்குகிறது.
    • ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 விலை ரூ. 89,900 ஆகும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) அனைத்தும் இம்மாதம் 9ஆம் தேதி நடந்த 'Awe Dropping' நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் அதன் சமீபத்திய ஹார்டுவேர் சாதனங்களைக் காட்சிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. இப்போது, புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

    ஆப்பிளின் சமீபத்திய சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைத்தளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன.

    கூடுதலாக, அவை பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் புனேவில் அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கும்.

    இன்று விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு காலையில் இருந்தே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று முதல் விற்பனைக்கு வந்த சாதனங்கள்:

    ஐபோன் 17 சீரிஸ்

    ஐபோன் ஏர்

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3

    ஆப்பிள் வாட்ச் SE 3

    ஐபோன் 17, ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) இந்திய விலை

    1. ஐபோன் 17 சீரிஸ், ஐபோன் ஏர்:

    இந்தியாவில் ஐபோன் 17 இன் விலை 256 ஜிபி மெமரி கொண்ட பேஸ் மாடலின் விலை ரூ. 82,900 முதல் தொடங்குகிறது. ஐபோன் ஏர் அதே மெமரி வேரியண்டின் விலை ரூ. 1,19,900 இல் தொடங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை முறையே ரூ. 1,34,900 மற்றும் ரூ. 1,49,900 விலையில் தொடங்குகின்றன.

    2. ஆப்பிள் வாட்ச்:

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலின் 42 மில்லிமீட்டர் அலுமினியம் ஜி.பி.எஸ். மாடலுக்கு ரூ. 46,900 என தொடங்குகிறது. ஜி.பி.எஸ். ஆதரவுடன் அலுமினிய கேஸ் கொண்ட வாட்ச் எஸ்.இ. 3 மாடலின 40 மில்லிமீட்டர் வேரியண்ட் ரூ. 25,990 விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 விலை ரூ. 89,900 ஆகும்.

    3. ஏர்பாட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) விலை ரூ. 25,900.

    இந்த சாதனங்களை அதிகாரப்பூர்வ ஆப்பிள் வலைத்தளம் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 5,000 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மேலும், ஆப்பிள் தயாரிப்பின் முழு விலையையும் முன்கூட்டியே செலுத்த விரும்பாதவர்களுக்கு விலையில்லா EMI ஆப்ஷன்கள் உள்ளன.

    Next Story
    ×