மொபைல்ஸ்

M7 சீரிசில் குட்டி அப்டேட்... குறைந்த விலையில் புது வேரியண்ட் அறிமுகம் செய்த போக்கோ
- மைக்ரோ எஸ்டி மூலம் மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதி.
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்.
போக்கோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது M7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக கடந்த மாதம் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி மாடல்களை அறிமும் செய்தது.
இந்த நிலையில், போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ M7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி லிமிடெட் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரேம் தவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
போக்கோ M7 பிளஸ் 5ஜி அம்சங்கள்
6.9-இன்ச் FHD+ (2340 x 1080 பிக்சல்) FHD+ LCD ஸ்கிரீன் 144Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 3 6nm 5ஜி பிராசஸர்
அட்ரினோ 619 GPU
4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
128 ஜிபி UFS 2.2 மெமரி
மைக்ரோ எஸ்டி மூலம் மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதி
ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ்
ஹைப்ரிட் டூயல் சிம்
50MP பிரைமரி கேமரா, இரண்டாம் நிலை கேமரா, LED ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP64)
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, GPS + GLONASS,
யுஎஸ்பி டைப்-சி
7000mAh பேட்டரி
33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
போக்கோ M7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் போக்கோவின் பண்டிகை கால பிரச்சார திட்டம் 'POCO Festive MADness' இன் கீழ் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை செப்டம்பர் 23ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக தொடங்குகிறது.
போக்கோ M7 பிளஸ் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 ஆகும். வாடிக்கையாளர்கள் சிறப்பு சலுகைகளுடன், இந்த ஸ்மார்ட்போனை ரூ. 10,999 விலையில் வாங்கிட முடியும்.