என் மலர்

    அறிந்து கொள்ளுங்கள்

    நாடு முழுவதும் BSNL 4G சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி - அசத்தல் Data பிளான் அறிவிப்பு
    X

    நாடு முழுவதும் BSNL 4G சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி - அசத்தல் Data பிளான் அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு ஆகும்.
    • உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.

    இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் வெற்றிகரமாக இன்று முதல் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கி உள்ளது.

    இது பிஎஸ்என்எல் உடைய வெள்ளி விழா ஆண்டு (25 வருடங்கள் நிறைவு) ஆகும்.

    ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வந்தது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்தன.

    டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து 5வதாக உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

    இன்று (செப்டம்பர் 27) பிரதமர் மோடி, ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுடன் சுதேசி '4G' சேவையையும் காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய மோடி, உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு '4G' சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.

    பிஎஸ்என்எல் வாயிலாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறும்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே மக்களை கவரும் விதமாக ரூ.225க்கு 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.25 ஜிபி '4G' டேட்டா திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது.

    Next Story
    ×