உடற்பயிற்சி

ஒருவர் பிறந்த மாதத்தை பொறுத்து உடலில் எவ்வாறு கொழுப்பு சேர்கிறது என்பது தீர்மானிக்கப்படும் - எப்படி?
- பழுப்பு நிற கொழுப்பு திசு ஆற்றலை எரிக்கும், நம்மை சூடாக வைத்திருக்கும்.
- 'நேச்சர் மெட்டபாலிசம்' என்ற இதழில் வெளியாகி உள்ளது.
ஒருவரின் பிறந்த மாதத்திற்கும், அவரின் உடல் கொழுப்பை எவ்வாறு சேமிக்கிறது என்பதற்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறா?.. ஆம் என புதிய ஆய்வு ஒன்று அடித்துக் கூறுகிறது.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு 'நேச்சர் மெட்டபாலிசம்' என்ற இதழில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வின்படி, குளிர் காலத்தில் கருத்தரித்தவர்களில் ஒப்பீட்டளவில் அதிக பழுப்பு நிற கொழுப்பு திசுக்களின் செயல்பாடு (brown adipose tissue activity) இருந்துள்ளது.
பழுப்பு நிற கொழுப்பு திசு என்பது ஆற்றலை எரிக்கும், நம்மை சூடாக வைத்திருக்கும் மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
இதன்படி வெப்பமான காலங்களில் கருத்தரிக்கப்பட்டவர்களை விட, குளிர்ந்த மாதங்களில் கருத்தரிக்கப்பட்டு 10 மாதங்கள் கடந்து பிரசவிக்கப்படுபவர்களுக்குக் குறைந்த BODY MASS INDEX மற்றும் உள் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைவாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.