என் மலர்

    பொது மருத்துவம்

    சிவப்பா... வெள்ளையா... எந்த கொய்யாப்பழம் சிறந்தது?
    X

    சிவப்பா... வெள்ளையா... எந்த கொய்யாப்பழம் சிறந்தது?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது.
    • வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும்.

    அனைத்து பருவகாலங்களிலும் ருசிக்கப்படும் பழங்களில் ஒன்றாக விளங்கும் கொய்யா, 100-க்கும் மேற்பட்ட ரகங்களை கொண்டது. ஆனாலும் வெள்ளை நிறம், சிவப்பு நிறம் மட்டுமே பலருக்கும் பரீட்சயமானவை. பரவலாக கிடைக்கக்கூடியவை, விரும்பி சாப்பிடக்கூடியவை. இவை இரண்டும் சத்தானவை என்றாலும், சுவை, ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கிய நன்மைகளில் வேறுபடுகின்றன.

    வெள்ளை கொய்யா

    சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது. அதிக சர்க்கரை, ஸ்டார்ச், வைட்டமின் சி நிறைந்திருக்கும். சிவப்பு கொய்யாவை விட விதைகளும் அதிகமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக வெள்ளை கொய்யா குறிப்பிடப்படுகிறது.

    நன்மைகள்:

    * ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    * செரிமானத்தை துரிதப்படுத்தும்.

    * உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும்.

    * சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    * ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.

    * மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும்.

    * புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.

    சிவப்பு கொய்யா

    வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். ஆனால் சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் வைட்டமின் சி குறைவாக இருக்கும். கரோட்டினாய்டுகள், குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டான லைகோபீன் போன்றவை சிவப்பு நிறத்துக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    நன்மைகள்:

    * இதில் இருக்கும் அதிக லைகோபீன் இதயத்தைப் பாதுகாக்க உதவிடும்.

    * சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    * வைட்டமின் ஏ, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.

    * நார்ச்சத்தும் நிறைந்தது. செரிமானம் மற்றும் உடல் எடையை நிர்வகிக்க துணைபுரியும்.

    * இதில் சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

    எது சிறந்தது?

    இரண்டு கொய்யா ரகங்களும் ஆரோக்கியமானவை என்றாலும் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஏ, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காரணமாக சிவப்பு கொய்யா முதலிடத்தை பெறுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் காக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    அதேவேளையில் வெள்ளை கொய்யா ஊட்டச்சத்து மதிப்பில் குறைந்ததில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கும் சிறந்த தேர்வாக அமையும். அவரவர் உடல் நலனுக்கு எது ஏற்புடையது என்பதை முடிவு செய்து, ருசிக்கலாம்.

    Next Story
    ×