என் மலர்

    பொது மருத்துவம்

    ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோயை அலட்சியப்படுத்தாதீர்கள்!
    X

    ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோயை அலட்சியப்படுத்தாதீர்கள்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
    • மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையை உருவாக்கி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். இதனை தொடர்ந்து நடிப்பில் தீவிரம் கவனம் செலுத்தி வந்த ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46.

    ரோபோ சங்கரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் கல்லீரல் செயலிழந்ததால் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோபோ சங்கரின் உயிரிழப்பு, கல்லீரல் நோய்களின் தீவிரத்தையும், சரியான சிகிச்சையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...

    கல்லீரல், கல்லீரல் நோய்களின் தீவிரம், சரியான சிகிச்சையும் முக்கியத்துவமும்

    கல்லீரல் கொழுப்பு நோய் இரண்டு வகைகளாக உள்ளது:

    ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.

    ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய்:

    அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படுகிறது. மது, உடலுக்கு தேவையற்ற நச்சாக செயல்படுவதால், கல்லீரல் அதை வெளியேற்ற முயல்கிறது. இதனால் கல்லீரல் செல்கள் சேதமடைந்து, கொழுப்பு படிந்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மேலும் மோசமடைந்தால், ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ் உருவாகலாம்.

    ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்:

    மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், உடல் பருமன், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கை, இரண்டாம் வகை சர்க்கரை நோய், உயர் கொலஸ்ட்ரால், முறையற்ற உணவு முறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

    தொடக்கத்தில் இந்நோய் அறிகுறிகளைக் காட்டாவிட்டாலும், முற்றிய நிலையில் சோர்வு, பலவீனம், வயிற்று வலி, மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல் போன்றவை தோன்றலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

    கல்லீரல் வீக்கம்:

    கல்லீரல் வீக்கம் பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ வைரஸ்கள், பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மூலமாகவோ, ஒரே சவரக்கத்தியை பலர் பயன்படுத்துவதாலோ பரவலாம். மேலும், அதிக மது அருந்துதல் மற்றும் மருத்துவர் பரிந்துரை இல்லாத மருந்துகளை உட்கொள்வதும் இந்நோயை உருவாக்கலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி போன்றவை இந்நோயை குணப்படுத்துவதாக நம்புவது தவறு, ஏனெனில் இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

    கல்லீரல் சிரோசிஸ்:

    கல்லீரல் சிரோசிஸ் என்பது கல்லீரல் திசுக்கள் வடு திசுக்களாக மாறி, நிரந்தரமாக சேதமடையும் நிலை. இதை குணப்படுத்த எந்த நாட்டு மருந்தும் இல்லை. இந்நிலையில் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டு, புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கும். உடனடி மருத்துவ சிகிச்சை மட்டுமே இதற்கு தீர்வு.

    கல்லீரல் செயலிழப்பு:

    கல்லீரல் செயலிழப்பு என்பது நோயின் இறுதி மற்றும் மிக ஆபத்தான நிலை. இதற்கு நாட்டு மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ தீர்வாகாது. ஒரே தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே. இந்நிலையில் நாட்டு மருந்துகளை நம்புவது உடலில் நச்சுக்களை அதிகரித்து, ரத்தப்போக்கு, சிறுநீரக செயலிழப்பு போன்ற அவசர நிலைகளை உருவாக்கலாம்.

    Next Story
    ×