என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே விவசாயி கொலையில் 2 பேர் சிக்கினர்- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    X

    சங்கரன்கோவில் அருகே விவசாயி கொலையில் 2 பேர் சிக்கினர்- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ளனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (வயது 42), விவசாயி.

    இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று ஆபிரகாமை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே ஆபிரகாமை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதைப்பார்த்த ஆபிரகாம் குடும்பத்தினர் அலறி துடித்தனர். கொலை குறித்த தகவல் அறிந்து சின்னகோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆபிரகாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பெண் விவகாரம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஆபிரகாமின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×