என் மலர்

    உண்மை எது

    2026 முதல் ரூ.500 நோட்டுகள் செல்லாதா? - மத்திய அரசு விளக்கம்!
    X

    2026 முதல் ரூ.500 நோட்டுகள் செல்லாதா? - மத்திய அரசு விளக்கம்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.500 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் எனக் கூறப்பட்டது.
    • சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையே இதற்கிடையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    மார்ச் 2026க்குள் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    மக்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.

    சமீபத்தில் 'கேபிடல் டிவி' என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோ, ரூ.500 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் எனக் கூறி, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ 4.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற நிலையில், PIB உண்மைச் சரிபார்ப்புத் துறை இந்த வதந்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இந்த நோட்டுகள் நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

    சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையே இந்த வதந்திக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த சுற்றறிக்கையில்,ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தை ஏடிஎம்கள் மூலம் அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

    இது ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு விளக்கமளித்துள்ளது.

    பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×