இந்தியா

பெரியார் புலிகள் காப்பகத்தில் காணப்படும் புதிய பட்டாம்பூச்சிகளில் ஒன்றான சஹ்யாத்ரி புல் மஞ்சள்
கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்தில் 12 புதிய இனங்கள் கண்டுபிடிப்பு
- பறவை இனங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு செய்யப்படுவது வழக்கம்.
- ஆய்வுக்குழு சிறிய இந்திய புணுகுபூனை, நீர்நாய், இந்திய காட்டுப் பூனை போன்றவற்றை கவனித்து ஆய்வு செய்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் புகழ்பெற்ற பெரியார் புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு 207 பட்டாம் பூச்சிகள், 71 தட்டாம் பூச்சிகள் மற்றும் கேரளத்தின் அதிகாரப்பூர்வ பறவையான கிரேட் ஹார்ன்பில் உள்பட ஏராளமான பறவை இனங்கள் உள்ளன. இங்குள்ள பறவை இனங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி தற்போது பெரியார் புலிகள் சரணாலயம், கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவை இணைந்து திருவனந்தபுரத்தை தளமாக கொண்ட ஒரு அமைப்பான திருவிதாங்கூர் இயற்கை வரலாற்று சங்கத்தின் ஒத்துழைப்புடன் கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விரிவான கணக்கெடுப்பு பணியை நடத்தின.
இந்த ஆய்வுக்குழு 40-க்கும் மேற்பட்ட எறும்புகள், 15 ஊர்வன, புலி, சிறுத்தை காட்டு நாய், காட்டெருமை மற்றும் யானை, பழுப்பு நிற கீரி, கோடிட்ட நிர்வாண கீரி, சிறிய இந்திய புணுகுபூனை, நீர்நாய், இந்திய காட்டுப் பூனை போன்றவற்றை கவனித்து ஆய்வு செய்தது. இதனை வெளியிட்டுள்ள பெரியார் கள இயக்குநர் பிரமோத், துணை இயக்குநர் சஜூ, உதவி கள இயக்குநர் லட்சுமி ஆகியோர் இந்த ஆய்வின் போது 12 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதன்படி புதிய பட்டாம் பூச்சிகள் சயாத்ரி புல் மஞ்சள் (வேம்படா பாப்பாத்தி), வெற்று ஆரஞ்சு முனை (உள்ளூர் பெயர்: மஞ்சத்துஞ்சன்), சஹ்யாத்ரி மஞ்சள் பலா மாலுமி (மஞ்ச பொந்த சுட்டான்) , இலங்கை பிளம் ஜூடி (சிலிகான் அட்டக்கா ரன்), வெற்று பட்டாம்பூச்சி, சிறிய ஹெட்ஜ்பெர்யான்னே ஓல், பாம் பாப் மற்றும் இந்திய டார்ட்.
புதிய தட்டாம்பூச்சிகள், சஹ்யாத்ரி நீரோட்டப் பருந்து மற்றும் கூர்க் நீரோட்டப் பருந்து. பெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்ட பறவைகள் கருப்புப் பறவை மற்றும் வெள்ளைத் தொண்டை தரைத் த்ரஷ் ஆகும்.