என் மலர்

    இந்தியா

    அருணாச்சல பிரதேசத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
    X

    அருணாச்சல பிரதேசத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசத்தில் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
    • அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு மத்திய அரசின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    பதற்றம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்களில் நீதிமன்றம் அனுமதியின்றி தேடுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரங்கள் இந்த ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    நம்சாய் மாவட்டத்தில் உள்ள திராப், சாங்லாங், லாங்டிங் மாவட்டங்கள், நம்சாய் மாவட்டத்தில் நம்சாய், மகாதேவ்பூர், சௌகாம் ஆகிய காவல் நிலையங்களின் அதிகார வரம்புக்குள் வரும் பகுதிகளில் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மீண்டும் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு, மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும் என்று கூறி உள்ளது.

    Next Story
    ×