இந்தியா

தண்ணீர் பாட்டில் மூடியை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு
- மவுனிகா தனது குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
- குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகளை வைக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் யுகந்தர். இவருடைய மனைவி மவுனிகா இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். தம்பதியின் ஒன்றரை வயது மகன் ரக்ஷித்ராம்.
மவுனிகா இரவு நேர பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய மகனை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மவுனிகா தனது குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு தண்ணீர் பாட்டில் மூடியை குழந்தை எடுத்து விழுங்கியது.
பாட்டில் மூடி தொண்டையில் சிக்கியதால் குழந்தை அலறியது. சத்தம் கேட்டு மவுனிகா மற்றும் அலுவலக ஊழியர்கள் ஓடி வந்தனர். குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரக்ஷித்ராம் இறந்தது.
இதைக் கண்டு அவருடைய தாய் கதறி அழுதார். குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகளை வைக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.