இந்தியா

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் வயிறு முழுவதும் நிரம்பியிருந்த ஸ்பூன், டூத் பிரஷ்கள்
- போதை மறுவாழ் மையத்தில் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டதால் கடுங்கோபம் அடைந்துள்ளார்.
- கொஞ்சம் காய்கறி, சப்பாத்தி, பிஸ்கட் போன்றவைகளை மட்டுமே வழங்கியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 35 வயதான சச்சின் என்பரை உறவினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இவருக்கு குறைந்த அளவு உணவே வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஒருநாள் முழுவதும் குறைந்த அளவு காய்கறிகள், சில சப்பாத்திகள் மட்டுமே வழங்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்து உறவினர்கள் உணவு கொண்டு வந்தால், கண்ணில் காட்டமாட்டார்களாம். சில நேரங்களில் ஒரேயோரு பிஸ்கட் மட்டுமே வழங்குவார்களாம்.
இதனால் கோபம் அடைந்த சச்சின் ஸ்பூன், டூத் பிரஷ், பேனா போன்றவற்றை கழிவறைக்கு எடுத்துச் சென்று, அங்குவைத்து இரண்டு மூன்ற தூண்டுகளாக உடைத்து சாப்பிட்டுள்ளார். சில நேரம் உள்ளே செல்லவில்லை என்றால், தண்ணீர் குடித்து விழுங்குவாராம்.
இதனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு வயிறு வலியால் துடித்துள்ளா். அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை நடத்தும்போது, வயிற்றுக்குள் ஸ்டீல் ஸ்பூன், டூத்பிரஷ் போன்றவை இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.