இந்தியா

VIDEO: வீட்டின் பால்கனி வழியாக செல்லும் மேம்பாலம்.. நாக்பூரில் வினோதம் - காரணம் தான் ஹைலைட்!
- தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 998 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
- எந்த ஆட்சேபனையும் கூறவில்லை என்பதால் பாலம் டிப் டாப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அசோக் சவுக் பகுதி பக்கம் செல்பவர்களுக்கு தலையை சொரிந்து யோசிக்கும் ஒரு காட்சி காணக்கிடைக்கும்.
அங்கு வீட்டின் பால்கனி வழியாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 998 கோடி ரூபாய் செலவில் இந்தோரா- திகோரி இடையே கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மோசமான திட்டமிடலுக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த NHAI அதிகாரிகள், அந்த வீட்டின் பகுதி சட்டவிரோத ஆக்கிரமிப்பில் அமைந்துள்ளதாகவும், மேம்பால கட்டுமானத்தில் போதே இதுபற்றி நாக்பூர் நகராட்சியிடம் தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.
இருப்பினும் நாக்பூர் நகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டின் உரிமையாளருடன் பேசி ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தனர். அந்த நபர் தனது வீட்டின் பால்கனி வழியாக மேம்பாலம் செல்ல எந்த ஆட்சேபனையும் கூறவில்லை என்பதால் பாலம் டிப் டாப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி மேம்பாலம் வைரலானது குறிப்பிடத்தக்கது.