இந்தியா

அரியானா மாடலிங் பிரபலம் கொலை வழக்கு.. காதலன் கைது - நாடகம் அம்பலம்
- ஷீத்தல் நீரில் மூழ்கியதாக சுனில் நாடகமாடியுள்ளார்.
- திருமண ப்ரோபோசலை ஷீத்தல் நிராகரித்தது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அரியானாவில் நாட்டுப்புற ஹரியான்வி இசைக்கலைஞரும் மாடலின் பிரபலமுமான ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலன் சுனில் கைது செய்யப்பட்டார்.
நேற்று (ஜூன் 16, 2025) சோனிபட் அருகே கால்வாயில் ஷீத்தலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இருந்த உடலில் பல கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.
முன்னதாக, தனது கார் கால்வாயில் விழுந்ததாகவும், ஷீத்தல் நீரில் மூழ்கியதாகவும் சுனில் நாடகமாடியுள்ளார். ஆனால், விசாரணையில் இந்த நாடகம் அம்பலமானது. இறுதியில் சுனில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சுனிலுடன் காரில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஷீத்தலை சுனில் அடித்து, கத்தியால் குத்தி, பின்னர் காரை ஷீத்தலின் உடலுடன் கால்வாயில் தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சுனில் திருமணமானவர் என்பதால், அவரது திருமண ப்ரோபோசலை ஷீத்தல் நிராகரித்தது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.