இந்தியா

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு
- துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.
- 4 ஆம் நாளாக இன்றும் பாரளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.
இதனிடையே துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 4 ஆம் நாளாக இன்றும் பாரளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளன.
Next Story