என் மலர்

    இந்தியா

    மகாராஷ்டிரா என்கவுண்டர்: தலைக்கு விலை வைக்கப்பட்ட  2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுகொலை
    X

    மகாராஷ்டிரா என்கவுண்டர்: தலைக்கு விலை வைக்கப்பட்ட 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுகொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.

    மகாராஷ்டிர காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கட்சிரோலி மாவட்டத்தில் எடாபள்ளி தாலுகாவில் உள்ள மோடாஸ்கே கிராமத்திற்கு அருகில் காட்டிற்குள் மாவோயிஸ்டுகளின் குழு முகாமிட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில், நேற்று (புதன்கிழமை) காலை காவல்துறையினர், சிஆர்பிஎஃப் மற்றும் நக்சல் ஒழிப்பு கமாண்டோ படைப்பிரிவினர் ஐந்து குழுக்களாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

    காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

    துப்பாக்கிச் சண்டை ஓய்ந்த பிறகு, தேடுதல் வேட்டையில் இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

    அவர்கள் உடல்களில் இருந்து ஏகே-47 துப்பாக்கி, பிஸ்டல், வெடிபொருட்கள், நக்சலைட் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    இறந்தவர்கள், உள்ளூர் ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.

    அவர்களின் தலைக்கு முறையே ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் மகாராஷ்டிரா காவல்துறை வெகுமதி அறிவித்திருந்தது.

    2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை கட்சிரோலியில் 93 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 75 பேர் சரணடைந்துள்ளனர் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினருடனான மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    Next Story
    ×