இந்தியா

பாராளுமன்றத்தில் சுவர் ஏறி குதிக்க முயன்று கைது செய்யப்பட்ட நபர் விடுதலை
- நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள ஒரு மரத்தில் ஏறி சுற்றுச்சுவரை தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்.
- மத்திய புலனாய்வு அமைப்பு அவரை விசாரித்தது.
பாராளுமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவரை ஏற முயன்றதாக பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹியைச் சேர்ந்த ராம் சங்கர் பிந்த், வெள்ளிக்கிழமை காலை, பாராளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள ஒரு மரத்தில் ஏறி சுற்றுச்சுவரை தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்.
அப்போது பாதுகாப்புப் பணியாளர்கள் தடுத்து நிறுத்தி, அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு அவரை விசாரித்தது. விசாரணையின் போது எந்த சந்தேகத்திற்கிடமான ஆதாரமும் கிடைக்காததால் போலீசார் அவரை விடுவித்தனர்.
விசாரணையின் போது, ராம் சங்கர் பிந்த் மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தோன்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story