என் மலர்

    இந்தியா

    அண்ணியின் தங்கையை திருமணம் செய்து வைக்க மறுப்பு: இருவரையும் துப்பாக்கியல் சுட்ட வாலிபர்..!
    X

    அண்ணியின் தங்கையை திருமணம் செய்து வைக்க மறுப்பு: இருவரையும் துப்பாக்கியல் சுட்ட வாலிபர்..!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அண்ணியின் தங்கையை திருமணம் செய்ய வாலிபருக்கு விருப்பம்.
    • குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

    அரியானாவில் அண்ணியின் தங்கையை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்ததால், சகோதரி இருவரையும் வாலிபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் ஷீனு (25), ரீது (23). இருவரும் சகோதரிகள். ஷீனுவின் கொழுந்தன் (brother-in-law) சுனில். சுனிலுக்கு ரீதுவை திருமணம் செய்து கொள்ள விருப்பம். தனது விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

    திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால் சுனில் கோபம் அடைந்து ஷீனு மற்றும் ரீதுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ரெயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு வரும் வழியில் இருவரையும் துப்பாக்கியல் சுட்டுள்ளார். இருவரும் படுகாயம் அடைந்து கீழே சரிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து சுனில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் ரோஹத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தப்பி ஓடிய சுனிலை போலீசார் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×