இந்தியா

பாராளுமன்றத்தில் கடைசி நாளிலும் எதிர்க்கட்சிகள் அமளி- ஒத்திவைப்பு
- பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின.
- மேல்சபை எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.
பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பீகார் வாக்காளர் திருத்தம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை கூடிய ஒரு நிமிடத்திலேயே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல மேல்சபையிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.
Next Story