இந்தியா

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க பாராளுமன்றம் ஒப்புதல்
- மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
- மேலும் 6 மாதத்துக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
புதுடெல்லி:
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கான காலக்கெடு ஆகஸ்டு 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதற்கிடையே, 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, கடந்த வாரம் மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையிலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது.
மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக அமைதி திரும்பி இருக்கிறது. நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
Next Story