இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி
- ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
- எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தன. இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜூலை 29-ம் தேதி அன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடைபெறும். மக்களவையில் 16 மணி நேரம், மாநிலங்களவையில் 9 மணி நேரம் விவாதத்துக்காக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு இறுதி செய்யப்பட்டது.
இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிலளிக்க உள்ளனர்.