இந்தியா

பிரதமர் மோடியின் பிறந்தநாள் எங்களுக்கு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்.பி. தாக்கு
- எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
- நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கிச் செல்கிறது என்றார்.
மும்பை:
காங்கிரஸ் எம்.பி.யான பிரணிதி ஷிண்டே மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை இன்று சந்தித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் பிறந்தநாள் எங்களுக்கு கருப்பு நாள்.
நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கி செல்கிறது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மோடிக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
விவசாயிகளின் போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானுடன் சண்டை போடும் அதே வேளையில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறோம்.
இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
சோலாப்பூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டாக சோலாப்பூர் நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது ஜனநாயகப் படுகொலை என தெரிவித்தார்.