இந்தியா

VIDEO: பிரபல யூடியூபர் எல்விஸ் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு
- முகமூடி அணிந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- சில குடும்ப உறுப்பினர்களும், பணியாளரும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தனர்.
அரியானா குருகிராமில் இன்று பிரபல யூடியூபரும் பிக் பாஸ் ஓடிடி வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் வீடு தாக்கப்பட்டது.
அதிகாலை 5:30 மணியளவில், குருகிராமில் உள்ள செக்டார் 57 இல் உள்ள எல்விஷ் யாதவின் வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இருப்பினும், எல்விஷ் யாதவ் அப்போது வீட்டில் இல்லை. எல்விஷின் வீடு கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் உள்ளது.
சில குடும்ப உறுப்பினர்களும், பணியாளரும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
இதில் வீட்டின் ஜன்னல்கள், கூரைகள் ஆகியவை சேதமடைந்தன. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story