இந்தியா

VIDEO: மாரடைப்பால் சரிந்து விழுந்து உயிரிழந்த டெலிவரி ஊழியர் - 30 வயதில் ஏற்பட்ட சோக முடிவு
- தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தார்.
- உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.
அரியானாவில் 30 வயது டெலிவரி ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
டெலிவரி ஊழியர் விகல் சிங், அரியானா மாநிலம் பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கடையில் டெலிவரி பாய் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், அவர் தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார். சக ஊழியர்கள் உடனடியாக அவரை தூக்கி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முதல் பார்வையில், அவர் மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.
ஊர் மக்களின் போராட்டத்தை அடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்குவதாக நிறுவனம் அறிவித்தது. இது தவிர, இறுதிச் சடங்குகளுக்காக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.