இந்தியா

நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? மைசூரு தசரா தொடக்க விழாவில் நிதானத்தை இழந்த சித்தராமையா
- கொஞ்சம் நேரம் உங்களால் உட்கார்ந்து இருக்க முடியாதா?
- நான் ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியலயா?
மைசூரு தசரா திருவிழா உலக புகழ் பெற்றது. இந்த தசரா விழா மைசூருவில் இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது சிலர் இருக்கையில் இருந்து எழுந்து கூச்சலிட்டு ஏதோ கூறிக்கொண்டே இருந்தனர். இதனால் சித்தராமையாக நிதானத்தை இழந்தார்.
நிதானத்தை இழந்து அவர் ஆவேசமாக பேசியதாவது:-
கொஞ்சம் நேரம் உங்களால் உட்கார்ந்து இருக்க முடியாதா? உட்காருங்கள். அது யாரு? நான் ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியலயா? நீங்கள் ஏன் இங்க வந்தீர்கள்? நீ வீட்டிலேயே இருந்திருக்கனும்" என்றார்.
காவல் அதிகாரிகளிடம் அவர்களை வெளியேற விட்டு விடாதீர்கள். அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் உட்கார முடியாதா? அப்படி என்றால், ஏன் இந்த விழாவில் பங்கேற்க வந்தீர்கள்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரி தசாரா விழாவை தொடங்கி வைக்க Booker Prize வின்னர் பானு முஷ்தாக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அழைப்பு விடுத்ததை தடைசெய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது.