இந்தியா

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை- போலீஸ்காரர் கைது
- இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் உமாசங்கர். ஊர் காவல் படையை சேர்ந்தவர் கிரண் குமார்.
இருவரும் அதே பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். யாரிடமாவது சொன்னால், அந்த பெண்ணின் 3 குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். ஆனால், இவருடைய புகாரை போலீசார் தொடர்ந்து நிராகரித்துள்ளனர். இதனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேட்டி அளித்தார்.
இதைத்தொடர்ந்து பங்காருபாளையும் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாசங்கர், கிரண்குமாரை கைது செய்தனர். இந்த தகவலை பலமனுார் டி.எஸ்.பி. தெரிவித்தார்.
Next Story