என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆக்ரோஷமான பேட்டிங்கால் பதிலடி - அபிஷேக் சர்மா பேட்டி
    X

    பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆக்ரோஷமான பேட்டிங்கால் பதிலடி - அபிஷேக் சர்மா பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹாரிஸ் அபிஷேக் சர்மாவை ஸ்லெட்ஜிங் செய்யும் வித மாக வம்புக்கு இழுத்தார்.
    • அபிஷேக் சர்மாவும் திருப்பி ஏதோ கூறி பதிலடி கொடுத்தார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி பேட்டிங் செய்தபோது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் வீசினார். அப்போது 3 பந்தை எதிர் கொண்ட அபிஷேக் சர்மா ரன் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஹாரிஸ் அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் வித மாக வம்புக்கு இழுத்தார். அதற்கு அபிஷேக் சர்மாவும் திருப்பி ஏதோ கூறி பதிலடி கொடுத்தார்.

    பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் பவுண்டரி அடித்தார். இதனால் ஹாரிஸ் ஏதோ கூற மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா கோபமானார். அத்துடன் ஹாரிஸ் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். நடுவர் இருவரையும் சமாதானம் செய்தார்.

    இது குறித்து அபிஷேக் சர்மா போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் வீரர்கள் எந்த காரணமும் இல்லாமல் எங்களை நோக்கி வந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறைதான் அதற்கு பதிலடியாக இருந்தது. அவர்களுக்கு மருந்து கொடுக்க ஒரே வழி இதுதான்.

    நானும் சுப்மன் கில்லும் பள்ளி நாட்களில் இருந்தே விளையாடி வருகிறோம். ஒருவருக்கொருவர் துணை நிற்பதை ரசிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×