கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்டில் அர்ஷ்தீப்தான் பிரீமியர் பவுலர்: அஸ்வின்
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
- பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உடன் மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் துபே இருப்பதால், அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. நேற்று இலங்கைக்கு எதிராக 4 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினாலும், சூப்பர் ஓவரை அட்டகாசமாக வீசினார். இவருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.
இந்த நிலையில் டி20-யில் அர்ஷ்தீப் சிங்தான பிரீமியர் பவுலர் என அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-
ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பே, அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவன் அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏன் இந்தியாவின் பிரீமியர் பவுலர்களில் ஒருவர் என்பதை அவர் காட்டினார்.
இந்திய அணியில் பும்ரா இருக்கும்போது, மக்கள் அர்ஷ்தீப் சிங்கை பற்றி அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் பிரீமியர் பவுலர் என்று கூறுவேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.