கிரிக்கெட் (Cricket)

VIDEO : சூப்பர் ஓவரில் ஷனகாவை சுஞ்சு சாம்சன் தெளிவாக ரன்அவுட் செய்த போதும் அவுட் கொடுக்காதது ஏன்?
- இந்தியா 202 ரன்கள் குவித்தது.
- நிஷாங்கா 107 ரன்கள் விளாசியதால் போட்டி "டை"யில் முடிந்தது.
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது. பின்னர் பதுன் நிஷாங்காவின் சதத்தால் (107) இலங்கை இமாலய இலக்கை நெருங்கியது. சரியாக 202 ரன்கள் அடித்ததால், போட்டி "டை" யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஷனகா பேட்டிங் பிடித்தார். துல்லியமாக ஆஃப்சைடு யார்க்கராக வீசப்பட்ட ஷனாகா அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. பந்து பேட்டிங் பட்டது போன்று சத்தம் கேட்டதால் நடுவர் அவுட் கொடுத்துவிடுவார்.
அதேவேளையில் ஷனகா ரன் எடுக்க ஓட முயன்றார். அப்போது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், சரியாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீசுவார். இதனால் ரன்அவுட்டுக்கு அப்பீல் கேட்பார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கமாட்டார்.
ஐசிசி விதிப்படி அம்பயர் அவுட் என கையை உயர்த்திவிட்டால், வீசப்பட்ட பந்து அத்துடன் Dead ஆகிவிடும். அதன்பின் எந்தவிதமான செயல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதுபோன்றுதான் நடுவர் அவுட் கொடுத்த பிறகு, ரன்அவுட் செய்ததால் அவுட் கொடுக்கப்படவில்லை.
ஷனாகா உடனடியாக நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்வார். ரீபிளேயில் பந்து பேட்டில் படாமல் செல்லும். இதனால் நடுவர் முடிவு திரும்பப் பெறப்பட்டு, ஷனாகா பேட்டிங் செய்தார்.
இலங்கை சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுத்தது. இந்தியா அதை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது.