கிரிக்கெட் (Cricket)

ENGvIND 5th test: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்
- இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்தியா 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது.
முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த நிலையில், பென் டக்கெட் 43 ரன்னில் அவுட்டானார். ஜாக் கிராலி அரை சதம் கடந்து 64 ரன்னில் வெளியேறினார். ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.