என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    அக்டோபரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதல்: அட்டவணை வெளியீடு
    X

    அக்டோபரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதல்: அட்டவணை வெளியீடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணி அக்டோபர், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் ஆடுகிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி பெர்த்தில் நடக்கிறது. எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகள் அடிலெய்டு (அக்டோபர் 23), சிட்னியில் (அக்டோபர் 25) நடைபெறுகிறது.

    டி20 ஆட்டங்கள் கான்பெர்ரா (அக்டோபர் 29), மெல்போர்ன் (அக்டோபர் 31), ஹோபர்ட் (நவம்பர் 2), கோல்டுகோஸ்ட் (நவம்பர் 6), பிரிஸ்பேன் (நவம்பர் 8) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா செல்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பெர்த்தில் மார்ச் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.

    Next Story
    ×