கிரிக்கெட் (Cricket)
விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.
Live Updates
- 25 Nov 2024 12:51 PM GMT
ஷெர்ஃபேன் ரூத்தர்ஃபோர்டை ரூ. 2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்
- 25 Nov 2024 12:49 PM GMT
மணிஷ் பாண்டேவை ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 25 Nov 2024 12:49 PM GMT
பிரஷாந்த் சொலங்கி, ஜஹத்வெத் சுப்ரமணியன், ஃபின் ஆலென், டெவால்ட் பிரீவிஸ், பென் டக்கெட் UNSOLD
- 25 Nov 2024 12:48 PM GMT
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.20 லட்சம் ஊதியமாக பெற்ற துஷார் தேஷ்பாண்டேவை, தற்போதைய ஏலத்தில் ரூ.6.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது.
- 25 Nov 2024 12:47 PM GMT
எம். சித்தார்த்-ஐ ரூ. 75 லட்சத்திற்கும், திக்வெஷ் சிங்-ஐ ரூ. 30 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி