ஐ.பி.எல்.(IPL)

ஒயிட்பால் கேப்டன் பதவிக்கான பட்டியலில் நான் இல்லை: ஜோ ரூட்
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
- இதையடுத்து, ஜோஸ் பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
லண்டன்:
இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை ஏற்க தனக்கு ஆர்வம் இல்லை என நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதையடுத்து, ஜோஸ் பட்லர் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணி கேப்டன் பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளீர்களா என ஜோ ரூட்டிடம் கேட்கப்பட்டது.
இங்கிலாந்தில் ஒரு கேப்டனாக எனது நேரத்தைச் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அதைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் எவரும் மிகவும் பெருமைப்படுவார்கள், சிறந்த வேலையைச் செய்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் இந்தியாவை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நாங்கள் வெற்றிபெற முடியும் என நினைக்கிறேன். முதலில் நாங்கள் சொந்த மண்ணில் விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
5 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியா வருகிறது. போட்டியை வெல்லும் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.