ஐ.பி.எல்.(IPL)

எலிமினேட்டர்: குஜராத்தை வெளியேற்றியது மும்பை இந்தியன்ஸ்
- டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 228 ரன்களைக் குவித்தது.
சண்டிகர்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே மும்பை வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 22 பந்தில் 47 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்னும், திலக் வர்மா 25 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 22 ரன்னும் எடுத்தனர். ரோகித் சர்மா 50 பந்தில் 81 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். குசால் மெண்டிஸ் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சனுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னில் வெளியேறினார். அரை சதம் கடந்த சாய் சுதர்சன் 49 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ரதர்போர்டு 24 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.