என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    VIDEO: பந்தை வீசி வம்பிழுத்த ஹர்ஷித் ராணா - சிக்சர் விளாசி பதிலடி கொடுத்த பதும் நிசங்கா
    X

    VIDEO: பந்தை வீசி வம்பிழுத்த ஹர்ஷித் ராணா - சிக்சர் விளாசி பதிலடி கொடுத்த பதும் நிசங்கா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார்.
    • ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார்.

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார். போட்டியின் 5 ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். அந்த ஓவரின் 4 ஆவது பந்தை பதும் நிசங்கா, ஹர்ஷித் ராணாவை நோக்கி அடிக்க அந்த பந்தை பிடித்து பதும் நிசங்காவை நோக்கி ராணா வீசி வம்பிழுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×