கிரிக்கெட் (Cricket)

ENGvsIND 4th Test: தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 54 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஆனாலும், காயத்தைப் பொருட்படுத்தாத ரிஷப் பண்ட் களமிறங்கி 2 சிக்சர் உட்பட 54 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், இந்த இன்னிங்சில் அடித்த அரைசதத்தையும் சேர்த்து ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் இதுவரை 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் (8 அரைசதங்கள்) வாழ்நாள் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.