என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    ENGvIND 4th Test: டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்
    X

    ENGvIND 4th Test: டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
    • ஆட்ட நாயகன் விருது இங்கிலாந்து கேப்டனுக்கு வழங்கப்பட்டது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் , பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினர்.

    311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடியது. கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.

    இதற்கிடையே, 3-வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார்.

    இந்நிலையில், நடப்பு தொடரில் சுப்மன் அடித்த 4-வது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்களின் மாபெரும் சாதனை பட்டியலில் சர் டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் 3-வது வீரராக சுப்மன் கில் இணைந்துள்ளார். மூவரும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர்.

    Next Story
    ×