என் மலர்

    கால்பந்து

    இந்தியாவில் சுனில் சேத்ரியை விட சிறந்த குவாலிட்டி வீரர் இல்லை: கால்பந்து அணி பயிற்சியாளர் சொல்கிறார்
    X

    இந்தியாவில் சுனில் சேத்ரியை விட சிறந்த குவாலிட்டி வீரர் இல்லை: கால்பந்து அணி பயிற்சியாளர் சொல்கிறார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுனில் சேத்ரி கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • பயிற்சியாளர் கேட்டுக் கொண்டதால் இந்த வருடம் நான்கு போட்டிகளில் விளையாடினார்.

    இந்தியாவில் தற்போது வரை சுனில் சேத்ரியை தவிர, தரமான வீரர் கிடையாது என இந்திய கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் கலித் ஜமில் தெரிவித்துள்ளார்.

    CAFA நேஷன்ஸ் கோப்பை ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேசிய முகாமில் சேத்ரி இடம் பெறவில்லை. இது அக்டோபர் மாதம் முக்கியமான ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளுக்கான தயார் படுத்துதல் தொடர். அக்டோபர் 9ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் சுனில் சேத்ரி விளையாடுவார் எனத் தெரிவித்தார்.

    சுனில் சேத்ரி குறித்து தலைமை பயிற்சியாளர் கலித் ஜமில் கூறுகையில் "இந்தியாவில் சுனில் சேத்ரியைத் தவிர்த்து தரனமான (Quaity) வீரர் கிடையாது. அவர் விளயைாடுவதற்கு தயாராக இருக்கும்போது, அவரை ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது. அவருடைய அனுபவம் நமக்கு தேவை. அவர் ஒரு லெஜெண்ட். நாட்டிற்காக பலவருடங்கள் விளையாடி பங்களிப்பை கொடுத்துள்ளார்" என்றார்.

    சுனில் சேத்ரி கடந்த வருடம் ஜூன் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு கடந்த மார்ச் மாதம் மாலத்தீவு அணிக்கெதிராக களம் இறங்கினார். அப்போதைய தலைமை பயிற்சியாளர். மனோலோ மார்க்யூஸ் வேண்டுகோளை தொடர்ந்து அணிக்கு திரும்பினார்.

    அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகு நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு கோல் அடித்துள்ளார். அந்த போட்டியில் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது. இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக 0-0 என டிரா செய்தது. ஹாங்காங்கிற்கு 0-1 என தோல்வியடைந்தது. தாய்லாந்துக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் 0-2 எனத் தோல்வியடைந்தது.

    Next Story
    ×