விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.
பாரிஸ்:
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Next Story