டென்னிஸ்

ஹாலே ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பப்ளிக்
- ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ரஷியாவின் கரன் கச்சனாவ் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என கச்சனாவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பப்ளிக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பப்ளிக், மெத்வதேவை சந்திக்கிறார்.
Next Story