டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகிய கார்லோஸ் அல்காரஸ்
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- இந்தத் தொடரில் இருந்து ஸ்பெயின் வீரர் அல்காரஸ் காயத்தால் விலகினார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான கார்லோஸ் அல்காரஸ் பங்கேற்க இருந்தார்.
சமீபத்தில் முடிந்த பார்சிலோனா ஓபன் தொடரின் இறுதிப்போட்டியில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில், மாட்ரிட் ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
4 முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள அல்காரஸ் மாட்ரிட் ஓபனில் 2022 மற்றும் 2023 என 2 முறை கோப்பை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story