டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் முதல் சுற்றில் வெற்றி
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை கோகோ காப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் டயானா யஸ்ட்ரீம்ஸ்கா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 0-6 என இழந்த கோகோ காப், சுதாரித்துக் கொண்டு அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story