டென்னிஸ்

பெர்லின் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் மார்கெட்டா
- ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது. அரையிறுதிச் சுற்று போட்டிகள் நடந்தன.
நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சீன வீராங்கனை வாங் ஜின் யு , செக் நாட்டின் மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா 7-6 (12-10) என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை வாங் ஜின் யு 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
Next Story