டென்னிஸ்

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்: ரிபாகினா, மேடிசன் கீஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
- குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.
லண்டன்:
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, பிரிட்டனின் ஹீதர் வாட்சன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஜகாரோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
Next Story